ஹோம் /தேனி /

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்: தேனி கோ- ஆப் டெக்ஸ்ஸில் தீபாவளியை முன்னிட்டு 30% தள்ளுபடி விற்பனை

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்: தேனி கோ- ஆப் டெக்ஸ்ஸில் தீபாவளியை முன்னிட்டு 30% தள்ளுபடி விற்பனை

கோ-ஆப்டெக்ஸ்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

தேனி மாவட்டம் கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தின் தீபாவளி சிறப்பு 30 சதவீத தள்ளுபடி விற்பனையை தேனி ஆட்சியர் முரளிதரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Theni, India

  கோ ஆப் டெக்ஸ்

  தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அதாவது கோ- ஆப் டெக்ஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

  அரசு பண்டிகை காலங்களில் பொதுமக்களை கவரும் விதமாக பல வண்ணங்களில் வடிவம் அமைக்கப்பட்ட மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்களை விற்பனை செய்து வருகின்றது.

  மேலும் கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

  அதன் படி தேனி நேரு சிலை அருகில் கோப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை தேனி ஆட்சியர் முரளிதரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

  தேனி கோ- ஆப் டெக்ஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 44,86,000 விற்பனை ஆனதாகவும் நடப்பாண்டு விற்பனையின் இலக்கு 54 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எளிய மக்களும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொருட்டு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கோ- ஆப் டெக்ஸ் அலுவலர்கள் தெரிவித்தனர்.

  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

  இவ்விழாவில் முதுநிலை மண்டல மேலாளர் சங்கர், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் சந்திரசேகரன், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Theni