ஹோம் /தேனி /

Theni | அரசு அதிகாரிகள் அத்துமீறி இடையூறு செய்கின்றனர்- சின்னமனூர் வர்த்தக சங்கத் தலைவர் புகார்

Theni | அரசு அதிகாரிகள் அத்துமீறி இடையூறு செய்கின்றனர்- சின்னமனூர் வர்த்தக சங்கத் தலைவர் புகார்

வணிகர்

வணிகர் சங்கம்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் ஒரு சில அரசு அதிகாரிகளால் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருவதாகவும் நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு எந்த இடையூறும் கொடுக்கக் கூடாது என சின்னமனூர் வணிக வர்த்த சங்கத்தி?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chinnamanur, India

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் ஒரு சில அரசு அதிகாரிகளால் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருவதாகவும் நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு எந்த இடையூறும் கொடுக்கக் கூடாது என சின்னமனூர் வணிக வர்த்த சங்கத்தின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வர்த்தக சங்கம்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் 600-க்கும் மேற்பட்ட வணிகர்கள் ஒருங்கிணைந்து சின்னமனூர் வர்த்தக சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். சின்னமனூர் வர்த்தக சங்கம் கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. சின்னமனூர் வர்த்த சங்கத்தில் சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை உறுப்பினராக உள்ளனர்.

சூப்பர் மார்க்கெட்

சின்னமனூர் பகுதியில் செயல்பட்டு வரும் சிறு வியாபாரிகள் சங்கம், மெடிக்கல் சங்கம், ஆட்டோ சங்கம், ஹோட்டல் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் இணைப்பு சங்கமாக சின்னமனூர் வர்த்தக சங்கம் செயல்பட்டு வருகிறது.

கடை

இந்த சங்கத்தில் புதிய உறுப்பினராக பதவி ஏற்ற நிர்வாகிகள் பதவி ஏற்ற 100 நாட்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளனர் . தமிழ்நாடு வணிக பேரவையின் கீழ் சின்னமனூர் வணிக வர்த்த சங்கம் இயங்கி வருகிறது.

வணிகர் சங்கத் தலைவர் உதயகுமார்

சங்க உறுப்பினர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திடும் நிலையில் சின்னமனூர் பகுதியில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக சின்னமனூர் வர்த்தக சங்கத் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒரு சில அரசு அதிகாரிகளாலும் மற்ற நபர்களாலும் தொடர்ந்து சின்னமனூர் பகுதியில் வணிகம் செய்து வரும் சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவரும் வெவ்வேறு வகைகளில் இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு

தொடர்ந்து சின்னமனூர் பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட அரசு அதிகாரியின் மீது புகார் தெரிவித்த நிலையில் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க, வர்த்தக சங்கம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா பரவல் முடிந்த நிலையில் வணிகர்கள் தங்களது வாழ்வாதாரத்தில் முன்னேறி வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அன்னிய நிறுவனங்களால் உள்ளூர் வணிகர்களும் பாதிக்கப்படுவதாகவும் , ஜிஎஸ்டி வரி விதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் வணிகர்கள் பெறும் நீடித்த குழப்ப நிலைக்கு தள்ளப்படுவதாகும் சின்னமனூர் வர்த்த சங்கத் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சின்னமனூர் வர்த்தக சங்கத் தலைவர் உதயகுமார் கூறுகையில், ‘சின்னமனூர் பகுதியில் வணிகம் செய்து வரும் அனைத்து வணிகர்களும் எந்த ஒரு சிறு பிரச்சனையை சந்திக்கக் கூடாது என்பதற்காக சின்னமனூர் வணிக வர்த்தக சங்கம் இயங்கி வருகிறது. ஒரு சில அரசு அதிகாரிகளால் சின்னமனூர் வணிகர்கள் சில இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சின்னமனூர் வணிக வர்த்தக சங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து வியாபாரிகளும் நல்ல முறையில் வியாபாரம் செய்கின்றனர் என கூறவில்லை. அரசின் உத்தரவை மீறியோ அல்லது வேறு வகைகளில் குற்றம் செய்யக்கூடிய வியாபாரிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது சின்னமனூர் வணிக வர்த்தக சங்கம் எந்த ஒரு முறையிலும் தலையிடாது என தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் நியாயமாக வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் பொழுது சின்னமனூர் வணிக வர்த்தக சங்கம் தமிழ்நாடு வணிக பேரமைப்புடன் சேர்ந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருக்கும்.

அதேபோல ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் பட்சத்தில் உள்ளூர் வியாபாரிகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவுறுத்தலை அரசிற்கு வைக்கின்றோம்’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni