ஹோம் /தேனி /

முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணை குழுவினர் ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணை குழுவினர் ஆய்வு

X
முல்லை

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர்

Mullai Periyar Dam | முல்லைப் பெரியாறு அணையில் மாதாந்திர பராமரிப்பு, அணையின் மேற்பார்வை அணைக்கு வரும் நீர் வரத்து மதகுப்பகுதி மற்றும் நீர் கசிவு உள்ளிட்டவைகள் தொடர்பாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

முல்லை பெரியாறு அணையில் மாதாந்திர பராமரிப்பு, அணையின் மேற்பார்வை, அணைக்கு வரும் நீர் வரத்து மதகுப்பகுதி மற்றும் நீர் கசிவு உள்ளிட்டவைகள் தொடர்பாக மத்திய கண்காணிப்பு துணை குழுவினர் ஆய்வு செய்தனர்.

முல்லை பெரியாறு அணை :

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர்வரத்து உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மத்திய கண்காணிப்பு குழுவினரை அமைத்து ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு துணையாக மத்திய கண்காணிப்பு துணை குழுவும் ஆய்வு செய்து மாதாந்திர பராமரிப்பு, அணையின் மேற்பார்வை அணைக்கு வரும் நீர் வரத்து மதகுப்பகுதி மற்றும் நீர் கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை கண்காணிப்பு குழுவிற்கு சமர்ப்பித்து வருவது வழக்கம். அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய துணைக்குழுவினர் அணையில் ஆய்வு நடத்தினர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..!

தற்போது அணைக்கு நீர்வரத்து 2272 கன அடியாக உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 127.55 அடி உள்ளது. இந்நிலையில், அணையில் மத்திய கண்காணிப்பு துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் மத்திய நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசன துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் குமுளி 1ம் மைல் உள்ள பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

First published:

Tags: Local News, Theni