முகப்பு /தேனி /

தேனி டூ போடி இடையான ரயில் சேவை.. மின்னழுத்த கோபுரங்கள் குறித்த ஆய்வு..

தேனி டூ போடி இடையான ரயில் சேவை.. மின்னழுத்த கோபுரங்கள் குறித்த ஆய்வு..

X
தேனி

தேனி டூ போடி இடையான ரயில் சேவை

Theni Bodi Train : தேனியில் இருந்து போடி வரையிலான ரயில்வே பணிகள் நிறைவு பெற்ற நிலையில், உயர்மின்னழுத்த கோபுரங்கள் குறுக்கிடும் இடங்களில் மின்சாரத்தின் தாக்கம் எதுவும் உள்ளதா என்ற ஆய்வு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனியில் இருந்து போடிக்கு செல்லும் ரயில் பாதைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது.

தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் இருப்புப் பாதை சோதனை, அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம், நடைமேடை அமைக்கும் பணி, மின்விளக்குகள் சரிபார்ப்பு, உள்ளிட்ட பல கட்ட சோதனை நடைபெற்றது.

தேனி டூ போடி இடையான ரயில் சேவை பணி ஆய்வு

இந்நிலையில், மதுரை முதல் போடி வரை ரயில் இயக்கவும், போடி - மதுரை ரயில் சேவையை விரிவக்கம் செய்து சென்னை வரை ரயில் இயக்க வேண்டும் என தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் போடி முதல் சென்னை வரை ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது .

தற்போது தேனி-போடி இடையிலான ரயில்பாதை பகுதிகளில் உயர்மின்னழுத்த கோபுரங்கள் குறுக்கிடும் இடங்களில் மின்சாரத்தின் தாக்கம் எதுவும் உள்ளதா என கண்டறிய தென்னக ரயில்வே, துணை தலைமை மின்பொறியாளர் ரோகன் தலைமையிலான குழுவினர், உயர்மின்னழுத்த கோபுரங்கள் குறுக்கிடும் இடங்களில் இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : இரவில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஈரோடு ஜவுளி சந்தை பற்றி தெரியுமா?

இதற்கான பிரத்யோகமான( TOWER WAGON ) ரயில்பெட்டியுடன் வந்த அதிகாரிகள் எலக்ரிக் டிரெய்னுக்கான மின் வழித்தட ஆய்வும் மேற்கொண்டுள்ளனர். தேனி முதல் போடி வரை அனைத்து ஆய்வு பணிகளும் முடிந்த பின்னர் விரைவில் சென்னை முதல் போடிநாயக்கனூர் வரை ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Southern railway, Theni