தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட மருத்துவ அணி சார்பாக பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது .
தனியார் திருமணம் மஹாலில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனர். இந்த முகாமில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் அரசுத்துறை வேலை வாய்ப்புகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவர்களும் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர்.
தேனி நகர அமமுக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் ஆகியோர் பங்கேற்று ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க : தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..
ரத்ததான முகாமில் அமமுக நிர்வாகிகள் ,பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர் . இரத்ததான முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்த நபர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பிரியா தலைமையில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni