Home /theni /

தேனியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி; மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தேனியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி; மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தேனி

தேனி மிதிவண்டிப் போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

மிதிவண்டி போட்டி

தேனி மாவட்டம் கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 15-ம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

இந்த மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த சைக்கிள் போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும்
15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும் மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரம் உட்பட தூர அடிப்படையில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 5,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 மற்றும் நான்கு முதல் பத்து வரை உள்ள மாணவர்களுக்கு ரூபாய் 250 ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பரிசினை அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியரிடம் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி