ஹோம் /தேனி /

பானை, தட்டின் மீது நின்று பரதநாட்டியம்.. தேனியில் தாய், மகள் உட்பட 63 மாணவிகள் உலக சாதனை!

பானை, தட்டின் மீது நின்று பரதநாட்டியம்.. தேனியில் தாய், மகள் உட்பட 63 மாணவிகள் உலக சாதனை!

X
பரதம்  

பரதம்  

Theni bharathanatyam | தேனி மாவட்டம் வீரபாண்டியில் அபிநயா பரதநாட்டிய இசை பள்ளி சார்பில் ஏராளமான மாணவிகள் பானை, தட்டின் மீது நின்று பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனியில் பானை, தட்டின் மீது நின்று பரதநாட்டியம் நடனம் ஆடி விரிக்க்ஷா புக் ஆப் உலக சாதனையில் இடம் பெற்று உலக சாதனை நிகழ்த்திய பரதநாட்டிய மாணவிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் .

பரதநாட்டியம் :-

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அபிநயா பரதநாட்டிய இசை பள்ளி சார்பில் பரதநாட்டிய மாணவிகள் பானை மற்றும் தட்டின் மீது பரதநாட்டியம் நடனமாடி உலக சாதனை முயற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அபிநயா பரதநாட்டிய இசை பள்ளியை சேர்ந்த 63 மாணவிகள் ஒன்றிணைந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்

மாணவிகள் பானை மீது ஏறி நின்றும் தட்டின் மீது ஏறி நின்றும் பரதநாட்டியம் நடனம் ஆடி விரிக்க்ஷ பூக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நான்கு வயது முதல் உள்ள குழந்தைகள் முதற்கொண்டு சுமார் 63 மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தினார்

இந்த உலக சாதனை முயற்சியில் தாய் மற்றும் மகள் பங்கேற்று ஒன்றாக நடனமாடி உலக சாதனை நிகழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரதநாட்டிய மாணவிகளுக்கு விரிக்க்ஷா புக் ஆப் ரெகார்ட் சார்பில் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்

First published:

Tags: Dance, Local News, Theni, World record