Home /theni /

தேனியில் போதை மருந்து பழக்கம்; குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனியில் போதை மருந்து பழக்கம்; குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

Theni | தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குழந்தை திருமணம் மற்றும் போதை பழக்கமுறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குழந்தை திருமணம் மற்றும் போதை பழக்கமுறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தேனி மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  செப்டம்பர் 15-ம் தேதி தேனி மாவட்ட சைல்டு லைன் சார்பாக குழந்தை திருமணம் மற்றும் போதை பழக்க தடுப்புமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் தலைமையிலும் தேனி சைல்ட் லைன் இயக்குனர் மற்றும் ஏஹெச்டிஎம் டிரஸ்ட் நிர்வாகியுமான முகமது ஷேக் இப்ராஹிம் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப் பழக்கத்தால் எவ்வாறு சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது பற்றியும், போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு எந்த மாதிரியான வழிகள் பின்பற்றப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைகள் மூலமாகவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும் நீதிபதியுமான ராஜ்மோகன் சிறப்புரையாற்றினர்.

நன்றியுறையாக மாவட்ட சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுவும் தொகுப்புரையாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மருதுபாண்டியும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி