ஹோம் /தேனி /

தேனி வீரபாண்டி கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து பலி 

தேனி வீரபாண்டி கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து பலி 

மூதாட்டி சடலத்தை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

மூதாட்டி சடலத்தை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

Veerapandi Kovil | தேனி அருகில் அரண்மனை புதூர் பாலத்தின் அடியில் செல்லும் முல்லைப் பெரியாற்றில் 78 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை - துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த முத்து கருப்பு தேவர் மனைவி 78 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சீனியம்மாள். இவர் கடந்த 31ஆம் தேதி அன்று சாமி கும்பிடுவதற்காக வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு வந்தவர், முல்லைப் பெரியாற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மதியம் அரண்மனை புதூர் பாலத்தின் அடியில் செல்லும் முல்லை பெரியாற்றில் இறந்த நிலையில் மூதாட்டி சடலம் மிதப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் இறந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க : பசுமை சோலையாக மாறப்போகும் கம்பம் நகர்... கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்...

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni