Home /theni /

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு சமூக சேவகர்களுக்கு விருது

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு சமூக சேவகர்களுக்கு விருது

சமூக

சமூக சேவர்களுக்கு விருது

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
உலக அமைதி தின விழாவை முன்னிட்டு, தேனி பழைய பேருந்து நிலையத்தில் உலக அமைதி குழுவினர், உலக அமைதி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்காக அமைதி ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக அமைதி ஊர்வலம்

உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட உலக அமைதிக் குழுவின் சார்பாக, பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேரு சிலை வழியாக திட்டசாலையில் உள்ள தனியார் மஹால் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த அமைதி ஊர்வலத்தை தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

சமூக சேவர்களுக்கு விருது


இந்த ஊர்வலத்தில் தேனி மாவட்ட உலக அமைதி குழு ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி தலைமையிலும் பொதுச்செயலாளர் ஜெயபாலன் முன்னிலையிலும் அமைதி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வெள்ளை கொடியேந்தி ஏராளமானோர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அமைதி ஊர்லவம்


பின்னர் தனியார் மஹாலில் தேனி மாவட்டத்தில் மக்கள் சேவையில் கிராமம், தாலுகா, வார்டு வாரியாக சிறப்பாக செயல்பட்ட நபர்களாக பொதுமக்கள் தேர்வு செய்த சிறந்த சமூக சேவகர்களுக்கு, அவர்கள் செய்த சேவையை பாராட்டி சிறந்த சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைதி ஊர்வலம்


இதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நபர்களுக்கு தேனி மாவட்ட உலக அமைதி குழுவின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை, தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட உலக அமைதி குழுத் தலைவர் ராஜகுரு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகவும் தேனி மாவட்ட உலக அமைதி குழு ஆலோசகர்கள் வினோபா மற்றும் சர்ஜில் துரை மற்றும் தேனி மாவட்ட உலக அமைதி குழு உறுப்பினர்கள் ரமேஷ், சுந்தர், சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி