முகப்பு /தேனி /

தேனி : படங்கள் வரைந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்!  

தேனி : படங்கள் வரைந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்!  

X
விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு 

Theni | பண்ணைப்புரம் பேருந்து நிலையம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு படங்கள் வரைந்து விவசாயிகளுக்கு புரியும் வகையில் வேளாண் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

பண்ணைப்புரம் பேருந்து நிலையம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு படங்கள் வரைந்து விவசாயிகளுக்கு புரியும் வகையில் வேளாண் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர் .

விழிப்புணர்வு நிகழ்ச்சி :-

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேருந்து நிலையம் அருகே வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் இந்த நிகழ்ச்சியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

வேளாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு விவசாயம் பற்றிய செயல்முறை அறிவை பெற வேண்டும் என்ற நோக்கில் விவசாய களத்திற்கு சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவர். அந்த வகையில் தற்போது தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அதிக மகசூல் பெறுவதற்கு எவ்வாறு பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தப் பயிற்சியில் மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் விவசாயிகளுக்கு எளிதாக புரியக்கூடிய வகையில் தரையில் படங்கள் வரைந்து நேரடியாக நில அமைப்பு படி விவசாயம் செய்தல் பயிர் வகைகளின் வரலாற்றுப் பின்புலம் உயிர் உரங்கள் பற்றி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமான சிறு குறு விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சியும் ஆலோசனையும் பெற்றனர்.

நிகழ்ச்சியில் பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர் லட்சுமி இளங்கோ தேனி திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் குரு இளங்கோ மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Agriculture, Forest, Local News, Theni