ஹோம் /தேனி /

மீண்டும் ‘கிழக்கே போகும் ரயில்’ 12 வருஷம் கழிச்சு போடிக்கு வந்த ரயில்.. குஷியில் தேனி மாவட்ட மக்கள்..

மீண்டும் ‘கிழக்கே போகும் ரயில்’ 12 வருஷம் கழிச்சு போடிக்கு வந்த ரயில்.. குஷியில் தேனி மாவட்ட மக்கள்..

X
தேனி

தேனி

After 12 years train reached Bodinayaknoor | 12 வருடங்களுக்குப் பிறகு போடி ரயில் நிலையத்திற்கு ஆய்வு பணிக்காக வந்த ரயில் இன்ஜினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

12 வருடங்களுக்கு பிறகு போடி ரயில் நிலையத்திற்கு ஆய்வு பணிக்காக வந்த ரயில் இன்ஜினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

சோதனை ஓட்டம் :

தேனியில் இருந்து போடி வரையிலான தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது இருப்பு பாதை சோதனைக்காக தேனியில் இருந்து ரயில் இன்ஜின் போடி ரயில் நிலையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளது.

மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்ட பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க : சனீஸ்வர பகவானால் அருள்பாலிக்கும் குச்சனூர் கோவில் - இங்கு வருவோருக்கு ஏற்படும் நன்மைகள்!

இதில் கடந்த மே மாதம் 26ம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் நடைபெற்று கடத்த 12ம் தேதி தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவடைந்தது.

இன்று இருப்பு பாதை ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து போடி வரையிலான ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

முன்னதாக தேனியில் அதற்கான பூஜை செய்யப்பட்டு ரயில்வே ஊழியர்கள் மிதமான வேகத்தில் இருப்பு பாதையினை ஆய்வு செய்து போடி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு போடி ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததை கண்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விரைவாக வேக சோதனை ஓட்டம் நடைபெற்று போடியிலிருந்து மதுரை வரலான சேவை துவங்க உள்ளதால் போடி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Local News, Theni