Home /theni /

Theni | பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதிர்வுத்தொகை கிடைக்கவில்லையா? - மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Theni | பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதிர்வுத்தொகை கிடைக்கவில்லையா? - மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

பெண்கள் திட்டம்

பெண்கள் திட்டம்

Theni | பெண் குழந்தைகளுக்கு சேமிப்புத் திட்டத்தின் முதிர்வுத் தொகை பெறுவது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007 வரை விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்கள் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 ஆம் ஆண்டு முதல் 2007 வரை விண்ணப்பித்து, பத்திரம் பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள், சில ஆவணங்களை சமூக நல விரிவாக்க அலுவலரிடம் ஒப்படைக்கும் போது இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்:

  • தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பத்திர நகல்

  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்

  • வங்கி கணக்கு புத்தக நகல்


  • பயனாளியின் புகைப்படம்


ஆகிய ஆவணங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் ஒப்படைத்து பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 04546-254368 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்,
அறை எண்.67, மூன்றாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி