ஹோம் /தேனி /

“உப்பு, காரம் அதிகமாக உள்ளது” - தேனி அரசு பள்ளி மாணவர் விடுதிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

“உப்பு, காரம் அதிகமாக உள்ளது” - தேனி அரசு பள்ளி மாணவர் விடுதிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

அரசு பள்ளி மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு

அரசு பள்ளி மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு

Theni : தேனி மாவட்டம் தேனியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தேனி பகுதியில் உள்ள மூன்று பள்ளிகள் மற்றும் மூன்று மாணவர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகி திருமணத்திற்கு வருகை தந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருமணம் முடிந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தார். அப்போது தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன் புத்தகம் கொடுத்து அவரை வரவேற்றார்.

பின்னர் தேனி நகர் பகுதியில் இருக்கும் மூன்று விடுதிகள் மற்றும் மூன்று பள்ளிகளை நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள், கழிவறைகள், சமையல் கூடம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து, மாணவ மாணவிகளுக்காக சமைத்து வைத்த உணவை ருசி பார்த்து “உப்பு, காரம் அதிகமாக உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

அதன் பிறகு குன்னூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் குறித்தும், மாணவர் வருகை பதிவேடு மற்றும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாணவ, மாணவிகள் அருகிலேயே அமர்ந்து கேட்டறிந்தார்.

பின்னர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில்,

“தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேனி பகுதியில் உள்ள பங்களாமேடு பகுதியில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளி பல ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளதால் அந்த பள்ளியில் வகுப்பறைகள் கட்டுவதற்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டிடங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படும்” எனவும் கூறினார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Minister, Theni