ஹோம் /தேனி /

தேனி : சண்முகா நதி அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு

தேனி : சண்முகா நதி அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு

அணை

அணை திறப்பு

Theni | தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், சண்முகா நதி அணையில் இருந்து கூடுதலான நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், சண்முகா நதி அணையில் இருந்து கூடுதலான நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சண்முக நதி அணை

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சண்முகா நதி அணை. சுமார் 52.55 அடி உயரம் கொண்ட இந்த சண்முகா நதி அணைக்கு ஹைவேவிஸ், மேல் மணலாறு, இரவங்கலாறு, மேகமலை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரே முக்கிய ஆதாரமாக உள்ளது.

மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தது. இந்த அணையால் ராயப்பன் பட்டி, ஆனைமலையன்பட்டி, அப்பிபட்டி மற்றும் ஓடைப்பட்டி வரையில் சுமார் 1,640 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தொடர் நீர் வரத்தால் அணையிலிருந்து உபரி நீர் மறுகால் பாய்கிறது.

இந்த நிலையில், 18 மீட்டர் தூரம் கொண்ட சண்முகாநதி கால்வாய் பகுதியில் இராயப்பன்பட்டி, மல்லிகாபுரம், சின்னஓவுலாபுரம் எரசக்கநாயக்கனூர், வெள்ளையம்மள்புரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளின் நீர் பாசனத் தேவைக்காக கூடுதலாக நீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் சண்முகா நதி அணையின் கால்வாயில் சுமார் 14.47 கன அடி வீதம் 52 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் உத்தமபாளையம் வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சண்முகாநதி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்து கொள்ள விவசாயிகளை தேனி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni