ஹோம் /தேனி /

தேனி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடித் திருவிழா தொடக்கம்

தேனி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடித் திருவிழா தொடக்கம்

தேனி

தேனி சனீஸ்வர திருக்கோவில்

தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kuchanur, India

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருகிறார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் நடைபெறும். தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமியைத் தரிசனம் செய்வர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தளா்வு அறிவிக்கப்பட்ட பின்பு, இந்தாண்டு ஆடித்திருவிழா இன்று முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும்.

இன்று முதல் வாரத்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 11 மணியளவில் கலிப்பணம் கழித்து, சுத்தநீா் தெளித்து, நண்பகல் 12 மணி அளவில் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், கருப்பணசுவாமிக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni