ஹோம் /தேனி /

தேனி : கண்களை கட்டியவாறு 3 மணி நேரத்திற்கு மேலாக சிலம்பம் சுற்றி உலக சாதனை  

தேனி : கண்களை கட்டியவாறு 3 மணி நேரத்திற்கு மேலாக சிலம்பம் சுற்றி உலக சாதனை  

X
உலக

உலக சாதனை முயற்சி

Theni: உலக சாதனை முயற்சிக்காக காலை 11 மணி அளவில் தொடங்கி மாலை 3 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுற்றி நோபல் புக் ஆப் உலக சாதனை இடம்பிடித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் கண்களை துணியால் கட்டிக்கொண்டு தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிலம்பம் சுற்றி நோபல் புக் ஆப் உலக சாதனையில் இடம்பிடித்து சிலம்பம் வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பொம்மைகவுண்டன்பட்டியில் சங்கர் சிலம்பம் தற்காப்பு மற்றும் ஆயுதக் கலை பயிற்சி மையம் சார்பில் தொடர்ந்து மூன்று மணி நேரம் கண்களை கட்டியவாறு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்த சாதனை முயற்சியில் சுமார் 50 சிலம்பம் வீரர்கள் கலந்து கொண்டு உலக சாதனை முயற்சியை நிகழ்த்தினார். நான்கு வயது முதல் உள்ள சிறுவர் சிறுமிகள் இந்த உலக சாதனை முயற்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக கண்களை கட்டி கொண்டவரை சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலக சாதனை முயற்சிக்காக காலை 11 மணி அளவில் தொடங்கி மாலை 3 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுற்றி நோபல் புக் ஆப் உலக சாதனை இடம்பிடித்தனர். தொடர்ந்து சிலம்பம் சுற்றிய சிலம்பம் வீரர்களுக்கு நோபல் புக் ஆப் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

First published:

Tags: Theni