முகப்பு /தேனி /

தேனியில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பில் மகுடம் சூட்டிய பெண் தொழில் முனைவோர்!

தேனியில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பில் மகுடம் சூட்டிய பெண் தொழில் முனைவோர்!

X
சிறுதானிய

சிறுதானிய பொருட்கள்

Small Grain Products | தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் தயாரித்த பொருட்கள் கண்காட்சியில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர் காட்சிப்படுத்தியிருந்த சிறுதானிய பொருட்களின் கண்காட்சி பலரின் கவனத்தைப் பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் சிறு பொருட்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்களும் சிறுசிறு பொருள்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களும் கலந்துகொண்டு தாங்கள் தயாரித்த பொருட்களை விழிப்புணர்வு கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

இந்த பொருட்கள் கண்காட்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதானிய தயாரிப்பாளர் ராஜேஸ்வரி, காட்சிப்படுத்தி இருந்த சிறுதானிய பொருட்கள் அங்கு சென்ற பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. கம்பு கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் இருந்து 150 க்கும் வகைகளான சிறுதானிய பொருட்கள் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

சிறுதானிய பொருட்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ராஜேஸ்வரி, சிறுதானிய பொருட்கள் தயாரிப்பில் முத்திரை பதித்தோடு மட்டுமல்லாமல் ICAR இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மில்லட்ஸ் ரிசர்ச் சார்பில் நடத்தப்பட்ட மில்லட் குக்கிங் சேலஞ்ச் போட்டியில் பங்கு பெற்று பத்து வகையான சிறு தானிய பொருட்கள் தயாரித்து முதல் பரிசை வென்றுள்ளர் . மேலும் பல்வேறு வகையான விருதுகளையும் வென்றுள்ளார் ராஜேஸ்வரி.

இவரின் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பு பற்றியும், சிறுதானிய பொருட்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது என்பதை பற்றியும் விளக்குகிறார் ராஜேஸ்வரி. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் சிறு தொழிலாக தொடங்கியுள்ளார் ராஜேஸ்வரி.

சிறுதானிய பொருட்கள் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்கிய போது ஆரம்ப கட்டத்தில் விற்பனை மந்தமாக இருந்ததாகவும், நாள்போக்கில் சிறுதானிய பொருட்களின் பயன்பாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதன் தொடர்ச்சியாகவும் , சமூக வலைதளங்கள் மூலம் பொருட்கள் பற்றி விளம்பரம் செய்ததன் மூலமும் சிறுதானிய பொருட்களுக்கான விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கம்பு, வரகு, ராகி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட சிறுதானிய பொருட்களை ஆன்லைன் மூலம் தமிழக முழுவதும் டெலிவரி தொகை இல்லாமல் விற்பனை செய்து வருவதாகவும், ஒரு முறை மக்கள் வாங்கி பயன்படுத்திய பின்பு மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்து வருவதாகவும் கூறுகிறார் ராஜேஸ்வரி.

    First published:

    Tags: Local News, Theni