முகப்பு /தேனி /

6 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரில் மிதந்து உலக சாதனை.. தேனி சிறுமி அசத்தல்!

6 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரில் மிதந்து உலக சாதனை.. தேனி சிறுமி அசத்தல்!

X
சாதனை

சாதனை படைத்த சிறுமி

Theni world record | தேனியில் நீரில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மிதந்து சாதனை படைத்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் 6 வயது சிறுமி நீரில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மிதந்து யுனிவர்சல் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனை படைத்து உள்ளார்.

உலக சாதனை முயற்சி :-

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி டைஷா ரவிக்குமார் நீச்சல் குளத்தில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் மிதந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்

சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்த சிறுமி டைஷா ரவிக்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு கழக சார்பில் தேனி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்தார்

மேலுமு் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தண்ணீரில் மிதக்கும் பயிற்சி மேற்கொண்டு வந்திருந்த சிறுமி

யுனிவர்சல் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் புத்தகத்தில் பதிவு செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க | தேனியில் நாளை மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

இதனை தொடர்ந்து தேனி விளையாட்டு மைதானம் அருகில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் தண்ணிரில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மிதந்து யுனிவர்சல் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனை படைத்தார்.

உலக சாதனை முயற்சியில் ஈடுபடும் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை உற்சாகப்படுத்தினர். சிறுமியின் உலக சாதனை முயற்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் தேனி மாவட்ட மக்கள் சிறுமிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni, World record