ஹோம் /தேனி /

தேனியில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து... தந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்ற மகள் உயிரிழப்பு.. 

தேனியில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து... தந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்ற மகள் உயிரிழப்பு.. 

108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

Theni District News : தேனியில் 108 ஆம்புலன்ஸ் விபத்தில் தந்தையை மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்ற மகள் பரிதாபமாக பலியானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த ஆம்புலன்சில் மணிக்கு உதவியாக அவரது மகள்கள் ஜெயா மற்றும் விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் மற்றும் டெக்னீசியன் ராஜா ஆகியோர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் உதவியாளர்களுடன் விரைந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டி பகுதி அருகே 108 ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நிலை தடுமாறி தலைக்குப்புற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் மணியின் மகள் ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க : வீட்டு மாடியில் மஞ்சள் தடவி காயவைக்கப்பட்ட சிறுத்தை தோல்.. தேனியில் வனத்துறை தீவிர விசாரணை

உயிரிழந்த ஜெயாவின் சகோதரி விஜயா(52), 108 ஆம்புலன்சின் டெக்னீஷியனான சின்னமனூர் புலிக்குத்தியை சேர்ந்த ராஜா(40), கம்பம் பகுதியை சேர்ந்த குமார்( 39) என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர், நோயாளியான மணி(72) ஆகிய நால்வரும் காயங்களுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni