ஹோம் /தேனி /

பொது சுகாதாரத்துறை சார்பில் 100வது ஆண்டு விழா - தேனி கலெக்டர் துவக்கி வைத்தார்

பொது சுகாதாரத்துறை சார்பில் 100வது ஆண்டு விழா - தேனி கலெக்டர் துவக்கி வைத்தார்

தேனி

தேனி

Theni | தேனி மாவட்ட விளையாட்டு திடலில் பொது சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற 100வது ஆண்டு விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை தேனி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் பொது சுகாதாரத்துறையின் 100வது ஆண்டை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் 100 மீட்டர் விளையாட்டு போட்டி துவக்கி வைத்தார். பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெற்று வருவதால், சுகாதாரத்துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தேனி மாவட்ட விளையாட்டு திடலில் பொது சுகாதாரத்துறை சார்பில் 100வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையேற்று 100 மீட்டர் விளையாட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Also Read : தேனி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் பனை விதைகள்! - பயன்பெற அழைப்பு

இதில் பொது சுகாதார துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, நிர்வாக அலுவலர் மணி சேகரன், நேர்முக உதவியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், பேட்மிட்டன், லக்கி கார்னர், இசை நாற்காலி போன்ற போட்டிகள் சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும், சான்றுகளும் வழங்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள வட்டார மருத்துவர்கள், வட்டார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni