முகப்பு /தேனி /

தேக்கடிக்கு படகு சவாரி செய்வதற்காக குவியும் சுற்றுலா பயணிகள்..!   

தேக்கடிக்கு படகு சவாரி செய்வதற்காக குவியும் சுற்றுலா பயணிகள்..!   

X
தேக்கடிக்கு

தேக்கடிக்கு படகு சவாரி செய்வதற்காக குவியும் சுற்றுலா பயணிகள்

Thekkady : தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் கோடை விடுமுறையால் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அடுத்து தேக்கடிக்கு சுற்றுலா செல்வர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய முக்கிய பகுதியாக உள்ளது தேக்கடி. தேக்கடியில் அடர்வன பகுதிக்கு நடுவே உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வனவிலங்குகளை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்த பின் தேக்கடி பகுதிக்கு நிச்சயம் சுற்றுலாவிற்காக செல்வர். முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்கத்தில் தேக்கடி பகுதியில் இருந்து கேரள வன துறை மற்றும் சுற்றுலா துறைக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன.

இங்கு இருந்து இயக்கப்படும் படகு சவாரியில் செல்லும்போது நீர் அருந்த வரும் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காகவே உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருவர். இங்குள்ள அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏரியில் படகு சவாரி செய்வது முக்கியமான நிகழ்வாகும்.

தேக்கடிக்கு படகு சவாரி செய்வதற்காக குவியும் சுற்றுலா பயணிகள்

உள்நாடு, வெளிநாடு என சர்வதேச சுற்றுலா தலமாக தேக்கடி விளங்குகிறது. நாள் ஒன்றுக்கு 5 முறை தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வதற்கு கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலையில் 7:30, 9:30,

11:15, மதியம் 1:45, 3:30 ஆகிய மணி நேரங்களில் 5 படகுகள் இயக்கப்படுகின்றன. படகு சவாரி செய்வதற்காக கட்டணம் ரூ 255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேக்கடி ஏரியில் நீர்வரத்து குறைந்திருந்தாலும் படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரி. மாணவ மாணவியர், சிறுவர்கள் உடன் குடும்பத்தோடு தேக்கடிக்கு வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் அடர்ந்த வனப்பகுதியில் படகில் சுமார் 2 மணி நேரம் உற்சாகத்தோடு சென்று அணை பகுதியில் உள்ள வனவிலங்குகளை நேரில் கண்டு களித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் தேக்கடி உலக சுற்றுலா தளமாக விளங்குவதால் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தேக்கடியில் குவிந்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Theni, Travel