முகப்பு /தேனி /

புதுப்பொலிவுடன் தொடங்கியது தேக்கடி 15வது மலர் கண்காட்சி.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதுப்பொலிவுடன் தொடங்கியது தேக்கடி 15வது மலர் கண்காட்சி.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

X
தேக்கடி

தேக்கடி 15வது மலர் கண்காட்சி

Thekkady 15th Flower Fair : தேக்கடி 15வது மலர்கண்காட்சி மேள, தளங்களுடன் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதனை தமிழ்நாடு மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Theni, India

கடந்த ஆண்டைக் காட்டிலும் தேக்கடி மலர் கண்காட்சி புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

தேக்கடி மலர் கண்காட்சி :

கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், மீண்டும் கடந்த ஆண்டு (2022) கேரள அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தேக்கடி 14 வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடைபெற்றது.

அதே போல இந்த ஆண்டு தேக்கடி 15 வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15 வது மலர்கண்காட்சியானாது, தேக்கடி-குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், 44 நாட்கள் நடைபெற உள்ளன.

புதிய பொருள் :

மேள-தாளங்களுடன் தொடங்கியுள்ள இந்த மலர் கண்காட்சி, இந்த ஆண்டிற்கான புதுமையாக, 'பழமையை நோக்கி பின் செல்வோம்' என்ற கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய பல்வேறு விவசாய பொருட்களும், விவசாயிகள் அன்றைய காலத்தில் எடுத்துக் கொண்ட உணவு முறைகள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது - மதுரை கோட்டம் அறிவிப்பு!

தேக்கடியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை தமிழ்நாடு மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்து கண்டுகளித்தனர். இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர் என கணிக்கப்பட்டுள்ளது.

இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் மலர் கண்காட்சி என்பதால், பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள.

இதற்காக 30,000 சதுர அடியில் 50க்கும் மேற்பட்ட வகையான மலர்களை கொண்டு பார்வையாளர்களை கவரும் விதமாக இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் விதமாக வண்ண விளக்குகள், குழந்தைகளைக் கவரும் உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெரிய ராட்டினங்கள், வணிகக் கடைகள், வேளாண் கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம் , கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், இன்னிசை கச்சேரி, நடன நாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், காமெடி அரங்குகள், மேடை நிகழ்ச்சி, சினிமா நாடகம் உட்பட மலர் கண்காட்சி நடைபெற உள்ள அனைத்து நாட்களிலும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

top videos

    இந்த மலர் கண்காட்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 60 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடும்பத்தோடு வாங்க, என்ஜாய் பண்ணுங்க.

    First published:

    Tags: Local News, Theni