தேனி மாவட்ட விவசாயத்திற்கு பிரதான அணையாக இருக்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது ஒரே அடியாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடர்ச்சியாக பெய்ந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீர் பிடிப்பு பகுதிளிலும் அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக கொட்டியதால், முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கடல் போல் காட்சியளித்தது. இதன் பிறகு விவசாயத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது, அணைக்கு நீர் வரத்து இருந்து வந்ததால், பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதன் பிறகும் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, மழை இல்லாததால், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் சரிந்து வந்தது.
பிறகு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டதால், தற்போது, வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள போதிலும் அணையின் நீர்மட்டம் 135 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. வட கிழக்கு பருவ மழை துவங்கிய போதிலும் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேனி மாவட்ட அணைகளின் நிலவம்:
தற்போதைய நிலவரப்படி, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக உள்ளது. வரத்து 802 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு 1500 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5854 மி.கனஅடியாக இருக்கிறது.
Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!
71 அடி உயரம் உள்ள வைகை அணை கடந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியதால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் உள்ளது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது.
வரத்து 1612 கனஅடி, திறப்பு 1669 கனஅடி, இருப்பு 5681 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 100 கன அடி, திறப்பு 40 கனஅடி, இருப்பு 435.32 மி.கனஅடி. சோத்துப்பாறை அணை நீரமட்டம் 126.28 அடி, வரத்து மற்றும் திறப்பு 30 கனஅடி. இருப்பு 100 மி.கனஅடி.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பருவ மழை கைகொடுத்தால் மட்டுமே தேனி, மதுரை, சிவங்கை, ராமநாபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெற முடியும் என்று கூறுகின்றனர். இல்லா விட்டால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mullai Periyar Dam, Theni, Vaigai dam level