ஹோம் /தேனி /

மழையே இல்லனாலும் தேனி வைகை அணையில் 70 அடி வரை நீர் இருக்கு...

மழையே இல்லனாலும் தேனி வைகை அணையில் 70 அடி வரை நீர் இருக்கு...

தேனி

தேனி

Vaigai Dam Continues at 70 Feet Despite The Absence Of Rain | மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாதபோதும், வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக கடந்த 50 நாட்களாக  70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாதபோதிலும், வைகை அணையில் தொடர்ச்சியாக கடந்த 50 நாட்களாக நீர் இருப்பு 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

இதையும் படிங்க  ; தேனியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்

தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு மேல் உயர்ந்தது. அதன் பிறகு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது.

இந்நிலையில், மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து சரிந்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது. 1544 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.45 அடியாக உள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 454 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1778 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni