முகப்பு /தேனி /

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் அசத்திய தேனி மாணவர்கள்.. சாம்பியன் பட்டத்தோடு திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு 

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் அசத்திய தேனி மாணவர்கள்.. சாம்பியன் பட்டத்தோடு திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு 

Theni

Theni

Theni News : தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில்  சாம்பியன் பட்டத்தையும் தீபம் சிலம்பம் தற்காப்பு அறக்கட்டளை மாணவர்கள் வென்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவாவில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நவம்பர் 5,6,7 ஆகிய தெதிகளில் நடைபெற்றது. இதில்  ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  இந்தப்போட்டியில் பங்கேற்றனர்.

இந்தப்போட்டியில் தேனி தீபம் சிலம்ப அறக்கட்டளை சிலம்ப மாஸ்டர் ஈஸ்வரன் தலைமையில் சென்ற 17 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் தனித்திறன் போட்டிகளாக நடைபெற்ற இந்த சிலம்பாட்ட போட்டியில் சுருள் வாள், வேல் ஒற்றைகம்பு, இரட்டை கம்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 11 மாணவ மாணவியர்கள் தங்கப்பதக்கமும் 6 மாணவ மாணவியர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

Also Read:  வீட்டிலிருந்தபடி ₹15,000 வருமானம்.. 140 வகையான சிறுதானிய கேக், பிஸ்கட் தயாரிப்பில் அசத்தும் தேனி பெண்..

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில்  சாம்பியன் பட்டத்தையும் தீபம் சிலம்பம் தற்காப்பு அறக்கட்டளை மாணவர்கள் வென்றனர். அதனையடுத்து தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அரண்மனை புதூர் விளக்கிலிருந்து பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கபட்டது

பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும்,சிலம்ப மாஸ்டர் ஈஸ்வரனையும் ஊர்வலமாக அரண்மனை புதூர் விளக்கிலிருந்து அரண்மனைப் புதூர் வரை ஊர் பொதுமக்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கும் விதமாக அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர்  - சுதர்சன் ( தேனி)

First published:

Tags: Local News, Sports, Theni