ஹோம் /தேனி /

தேனியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி நூதன முறையில் மனு அளித்த சிவசேனா கட்சியினர் 

தேனியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி நூதன முறையில் மனு அளித்த சிவசேனா கட்சியினர் 

X
அங்கப்

அங்கப் பிரதட்சன முறையில் மனு

Theni News : தேனியில் மதுபானக் கடையை அகற்ற அங்கட்பிரதட்சன முறையில் வந்து சிவசேனா கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி - கம்பம் தேசிய நெடுஞ்சாலை பழனிசெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் மதுபானகடையை அகற்றக்கோரி சிவசேனா கட்சியின் சார்பில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் தேனி -கம்பம் தேசிய நெடுஞ்சாலை பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடையை அகற்ற கோரி தூதன முறையில் தரையில் படுத்து உருண்டவாரே தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் .

இந்த கோரிக்கை மனுவில் தேனி கம்பம் தேசிய நெடுஞ்சாலை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் மகளிர் விடுதி, வங்கி , குடியிருப்பு பகுதி உள்ள நிலையில் மக்கள் கூடும் முக்கிய இடத்தில் தனியார் மதுபானக்கூடம் அமைந்துள்ளது. வங்கிக்கு அதிகமான பெண்களும், மகளிர் விடுதி பகுதிகளுக்கும் , குடியிருப்பு பகுதிகளுக்கும் ஏராளமான பெண்கள் சென்று வரும் இடத்தில் மதுபான கடை அமைந்து இருப்பதினால் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் பெண்கள் அதிகம் செல்லும் இடத்தில் உள்ள தனியார் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று கூறி சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்தவாறு தேனி மாவட்ட ஆட்சியாளர் முரளிதரனிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிவசேனாக் கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Tamil News, Theni