Home /theni /

தேனி : மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்கள்

தேனி : மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்கள்

தேனி : மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்கள்

தேனி : மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்கள்

Theni District News | கூடலூர் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த அனிதா ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பளுதூக்கும் போட்டி மற்றும் கபடி போட்டியில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் காவலர்களுக்கான போட்டியில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

    தங்கப்பதக்கம் :-

    மாநில அளவில் காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பங்கேற்றனர்.

    இந்த விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பளுதூக்கும் (80 & 75 கிலோ) போட்டியில் தேனி மாவட்டத்தின் சார்பாக பங்கேற்ற சின்னமனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த B.ராஜேஸ்வரி, கூடலூர் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த அனிதா ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    மேலும், இக்காவலர்கள் இருவரும் கபடி போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

    இதேபோல ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் தேனி மாவட்டத்தின் சார்பாக பங்கேற்ற, கம்பம் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த முரளி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தி உள்ளார்.

    மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தேனி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றதை பாராட்டும் வகையிலும் , காவலர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் விதமாகவும் வெற்றி பெற்ற காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே பாராட்டி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Cumbum, Gudalur, Police, Theni

    அடுத்த செய்தி