ஹோம் /தேனி /

தேனி மாவட்ட நீதிமன்றங்களில் 13-ம் தேதி சிவில் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் லோக் அதாலெத்

தேனி மாவட்ட நீதிமன்றங்களில் 13-ம் தேதி சிவில் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் லோக் அதாலெத்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் வரும் 13ம் தேதி லோக் அதாலெத் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தேனியில் வரும் 13ம் தேதி (நாளை மறுநாள்) லோக்அதாலெத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடக்கிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை விரைவாக தீர்க்கவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் இது வழி வகை செய்கிறது.

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட ப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி இது நடத்தப்படுகிறது.

    வரும் 13ம் தேதி தேனி மாவட்டத்தில், பெரியகுளம், உத்தம பாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப்பணிகள் சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடக்கிறது.

    இதில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடக்கிறது.

    இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட வழக்கு, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக் கடன், வங்கிக் கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இதை பொது மக்கள் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்களை விரைந்து முடித்து தீர்வு காணலாம் என்று தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni