முகப்பு /தேனி /

தேனி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்..  

தேனி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்..  

X
தேனி

தேனி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் 

Theni News : தேனி புதிய பேருந்து நிலையத்தை திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் தேனி நகர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக பல நாட்களாக வானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் பேருந்து நிலையம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. தேனி பேருந்து நிலையத்தை சுகாதாரமான முறையில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், சுகாதாரமற்ற முறையிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பிலும், பூங்கா பராமரிப்பு இல்லாமலும் காணப்பட்டது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஷஜீவனா தேனி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணிகளை துரிதப்படுத்தி பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். மேலும் பேருந்து நிலைய கடைகளில் சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் திறந்த நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடை உரிமையாளர்களிடம் உணவு பொருட்களை மூடி வைத்து விற்பனை செய்யவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து காவலர்களை அழைத்து பயணிகள் வந்து செல்லும் பகுதிகளில் தேவையற்ற வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கவும், நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார். குறிப்பாக பேருந்து நிலைய பகுதியில் தூய்மை பணியை துரிதப்படுத்தவும், பொது கழிப்பிடங்களை முறைப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

First published:

Tags: Local News, Theni