முகப்பு /தேனி /

தேனி லோயர் கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்கள்..

தேனி லோயர் கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்கள்..

X
வழிவிடும்

வழிவிடும் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்கள்

Theni News : தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள வழிவிடும் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் - குமுளி மலைச்சாலையில் வழிவிடும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழக பகுதி மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி மாதங்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை புரிவர்.  இந்நிலையில், முருகனுக்கு உகந்த நாளான தை மாதத்தின் தைப்பூச தினத்தன்று வழிவிடும் முருகன் கோயிலுக்கு கம்பம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனை வழிபட்டு சென்றனர்.

இன்றைய தைப்பூச தினத்தன்று கோவிலில் வழிபட்டால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து முருகனை வழிபட்டும், ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றியும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி மனம் பொங்க முருகனை வழிபட்டு வருகின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் பொதுமக்கள் சார்பாக வழங்கப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிவிடும் முருகனை தரிசித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni