ஹோம் /தேனி /

சின்னமனூரில் அரசியல் கட்சியனரையே மிரளவைத்த துணிவு கொண்டாட்டம்.. அஜித் ரசிகர்கள் மிரட்டல்.!

சின்னமனூரில் அரசியல் கட்சியனரையே மிரளவைத்த துணிவு கொண்டாட்டம்.. அஜித் ரசிகர்கள் மிரட்டல்.!

X
தேனியில்

தேனியில் துணிவு கொண்டாட்டம்

Theni thunivu celebration | தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணிவு படத்தின் முதல் கட்சியான 7மணி காட்சியில் துணிவு திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் அதிகாலை 5 மணி முதல் திரையரங்கு முன்பாக கூடி துணிவு பட வெளியீட்டை ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணிவு படத்தின் முதல் கட்சியான 7மணி காட்சியில் துணிவு திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் அதிகாலை 5 மணி முதல் திரையரங்கு முன்பாக கூடி துணிவு பட வெளியீட்டை ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.

துணிவு திரைப்படம் :-

நடிகர் அஜித்தின் 61வது திரைப்படமான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது. அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்த திரைப்படமான துணிவு திரைப்படம் ஜனவரி பதினொன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் துணிவு படம் வெளியாக இருந்த தியேட்டர்கள் முழுவதிலும் அஜித் ரசிகர்கள் பேனர் கட்டுகள் வைத்து துணிவு பட வெளியிட்டை திருவிழா போல் கொண்டாட திட்டமிட்டு இருந்தனர் .

அந்த வகையில் தற்போது ஜனவரி பதினொன்றாம் தேதி அன்று தமிழகம் முழுவதிலும் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் சிறப்பு காட்சிகளாக நள்ளிரவு ஒரு மணிக்கும் ஒரு சில மாவட்டங்களில் முதல் காட்சியாக நாலு மணி காட்சியாகவும் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் முதல் காட்சியாக 7 மணி காட்சி திரையிடப்பட்டது .

துணிவு திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் பேனர்கள் கட்டவுட்டுகள் வைத்து திரையரங்கை அலங்காரப் படுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் கூடலூர் சின்னமனூர் தேனி போடிநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் காட்சியான ஏழு மணி காட்சியில் துணிவு திரைப்படத்தை காண்பதற்கு அஜித் ரசிகர்கள் அதிகாலை 5 மணி முதல் திரையரங்கு முன்பாக கூடி ஆடல் பாடலுடன் முடிவு திரைப்படம் வெளியாவதை கொண்டாடி வருகின்றனர்

First published:

Tags: Ajith fans, Local News, Theni, Thunivu