ஹோம் /தேனி /

தேனி | தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்

தேனி | தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்

X
தர்ப்பணம்

தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்

Theni | தேனி மாவட்டம் சுருளி அருவிப் பகுதியில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் திதி கொடுத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

சுருளி அருவி

சுருளி அருவியில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவதை பார்க்க முடியும்.குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதால் அதிகமான பக்தர்கள் கூடுகின்றனர்.

இன்று விசேஷமான தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர். பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி பின்டம் வைத்து எள் தண்ணீர்விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்துவிட்டு தங்களது இல்லத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் பூதநாராயணன் கோவிலில், நவதாணியம் வைத்து வழிபாடு நடத்தினர்.

பின்னர், அங்குள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

தேனி: எலக்ட்ரிக் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் அதிகளவிலான பக்தர்கள் குவிந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அருவிப் பகுதியில் குளித்து நீராடி விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni