முகப்பு /தேனி /

பூசாரிகள் நல வாரியத்தை செயல் படுத்த வேண்டும்... தேனியில் கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்...

பூசாரிகள் நல வாரியத்தை செயல் படுத்த வேண்டும்... தேனியில் கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்...

X
கோயில்

கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்  

Theni News | பூசாரிகளின் மறைவிற்குப் பின் அவரது மனைவிக்கு அத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கிராம கோவில் பூசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில், செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியத்தை விரைவாக செயல்படுத்தவும், அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கவும், ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவிற்குப் பின் அவரது மனைவிக்கு அத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆர்ப்பாட்டத்தை தேனி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மற்றும் பூ கட்டுவோர் பேரவை இணைந்து நடத்தினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம் 2000 வழங்கப்படும் என அறிவித்தை ஆளும் திமுக அரசு தற்போது வரை அதை நிறைவேற்ற வில்லை எனக் கூறி திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

First published:

Tags: Local News, Theni