Union
Budget 2023

Highlights

ஹோம் /தேனி /

ஆயிரக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்த கோவில் திருவிழா.. தேனி தர்மாபுரி கிராமத்தில் கோலாகலம்..

ஆயிரக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்த கோவில் திருவிழா.. தேனி தர்மாபுரி கிராமத்தில் கோலாகலம்..

X
தேனி

தேனி

Temple Festival in Dharmapuri Village : தேனி மாவட்டம் தர்மாபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் திருக்கோவிலில், 3 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை தரிசித்தனர் . 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில்  ஸ்ரீவிநாயகர் ஸ்ரீரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. தர்மாபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டிற்கு ஒருமுறை மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா போன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற திருவிழாவில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

11ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, முளைப்பாரி, காவடி எடுத்து அம்மனை தரிசித்தனர். மேலும் காவடி ஆட்டம், புலி ஆட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் திருவிழாவில் காண்போரை பரவசம் அடையச் செய்தது. திருவிழாவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை, கர்ணன், காளிமுத்து தேவர் சின்ராஜ் , தலைமையில் இதர கமிட்டி நிர்வாகிகள் இணைந்து செய்துள்ளனர். விழாவை காணவும், அம்மன் அருள் பெறவும் ஏராளமான பொதுமக்கள் வருகை அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni