ஹோம் /தேனி /

சபரிமலை சீசன் தொடக்கம்... முன்னேற்பாடுகள் குறித்து இரு மாநில போலீசார் ஆலோசனை..

சபரிமலை சீசன் தொடக்கம்... முன்னேற்பாடுகள் குறித்து இரு மாநில போலீசார் ஆலோசனை..

இரு

இரு மாநில போலீசார் ஆலோசனை

Theni District News : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த இருமாநில காவல்துறையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர்.

இதில் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, குமுளி வழியாக கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், கோவிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்களுக்கு இருமாநில எல்லையான குமுளி, கம்பம்மெட்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட காவல்துறையினர் நடத்திய ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் நடைபெற்றது.

இதையும் படிங்க : பின்னால் நின்ற காட்டு யானை... ஆசிரியரின் திக்... திக்... நிமிடங்கள்...

ஆலோசனைக்கூட்டத்தில், தற்போது சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்ப கோவிலுக்கு செல்பவர்களுக்கு கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழி ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதை தவிற்பதற்கான தீர்வு குறித்தும், அவசர மெடிகல் கேம்ப் அமைப்பது உள்ளிட்டவைகள் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்ரே, உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சைப்பாண்டியன், போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை கண்ணன், கேரளா சார்பாக இடுக்கி மாவட்ட எஸ்பி குரியாகோஸ், ஏஎஸ்பி சுனீஷ்பாபு, மற்றும் இருமாநில வருவாய்துறையினர், கேரள மருத்துவத்துறையினர், குமுளி பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni