முகப்பு /தேனி /

தேனியில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

தேனியில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

மின் தடை

மின் தடை

Theni power cut | தேனி மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம், சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (29.04.23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மின்தடை :-

தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மார்க்கையன்கோட்டை மற்றும் ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டி, திம்மரசநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, மேலசிந்தலைச்சேரி, கீழசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

ALSO READ | முல்லைப்பெரியாறு அணை பகுதிகளில் கொட்டும் மழை.. உயரும் நீர்மட்டத்தால் தேனி விவசாயிகள் குஷி!

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சின்னமனூர் ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Power cut, Theni