ஹோம் /தேனி /

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் - நேரடி ரிப்போர்ட்..

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் - நேரடி ரிப்போர்ட்..

சுருளி

சுருளி அருவி

Theni Latest News : தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூல் செய் யப்படும் நிலையில், சுருளி அருவி முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர் 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத்தலம் சுருளி அருவி. 

தேனி மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக சுருளி மலை பார்க்கப் பட்டாலும், ஆன்மீகவாதிகளுக்கு சொர்க்க பூமி என்றே கூறலாம். ஆம், இங்கு என்னற்ற சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. கோடி லிங்கம், பூத நாராயணன் கோவில், கைலாச நாதர் குகை என ஆன்மீகத்திற்கு உகந்த இடமாகவும் இது விளங்குகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய சுற்றுலாத் தலமாக சுருளி அருவி விளங்கி வருகிறது. சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து சுருளிப்பட்டி ஊராட்சி மற்றும் வனத்துறை சார்பாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுருளி அருவி

சுருளிப்பட்டி ஊராட்சி சார்பாக வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சுருளி அருவி நுழைவு வாயிலில் வனத்துறை சார்பாக பெரியவர்களுக்கு 30 ரூபாய், சிறார்களுக்கு 20 ரூபாய், கேமரா போன்ற பொருட்களுக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சுருளி அருவி

சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

பெண்கள் உடை மாற்றும் இடம்:-

சுருளி அருவி நுழைவு வாயிலில் இருந்து அருவி பகுதிக்கு வனப்பகுதி வழியாக சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக சென்று அருவிக்கு செல்ல வேண்டும். நடைபயணமாக செல்லும் சுற்றுலா  பயணிகள் அருவி பகுதிக்கு சென்று குளித்தாலும் பெண்கள் அசௌகரியமாக உணர்வதாக கூறுகின்றனர்.

சுருளி அருவி

ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக குளிப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும்  பெண்கள்  அவ்வப்போது அசெளகரியத்தை உணர்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அருவிப் பகுதியில் குளித்துவிட்டு பெண்கள் உடை மாற்றுவதற்கு அறை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இருக்கும் உடைமாற்றும் அறையும், சுகாதாரமாக இல்லாமலும், கதவுகள் இல்லாமலும் காணப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் உடை மாற்றுவதற்கு இடமில்லாமல் பெண்கள் அல்லாடுகின்றனர். கழிப்பறையும் முறையாக சுத்தம் இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.

கதவில்லாத பெண்கள் உடை மாற்றும் அறை..

நுழைவு வாயிலில் இருந்து அருவிக்கு செல்லும் சாலை சேதமடைந்து கரடுமுரடாக குண்டும் குழியுமாக உள்ளதால், நுழைவு வாயிலிருந்து அருவி பகுதிக்கு முதியவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்த பேட்டரி காரும் நீண்ட நாட்களாக இயக்கப்படாமலேயே உள்ளது.

சுருளி அருவிக்கு கால்நடை பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் கோரிக்கை :-

அருவிப் பகுதியில் ஷாம்பு சோப்பு போன்ற பொருட்கள் பயன்படுத்த வனத் துறை சார்பாக தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், சுருளி அருவி பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் ஷாம்பு, சோப்பு, சீயக்காய் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் அதனை வாங்கி, அருவியில் குளித்துவிட்டு குப்பைகளை சாலையோரத்தில் வீசி சென்று விடுகின்றனர். சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய பழைய ஆடைகளும் ஓரு ஓரத்தில் குப்பைகளாக சேர்ந்து சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் உள்ளது.

அருவிப் பகுதியில் பழைய ஆடைகளின் குவியல்

சுருளி அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வாகனங்களை இயக்கவும், அருவி பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Suruli Falls Map

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Theni