முகப்பு /தேனி /

3 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட சுருளி அருவி..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

3 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட சுருளி அருவி..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

X
சுருளி

சுருளி அருவி

Suruli Falls Opens : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்ததால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருகை புரிந்து, அருவியில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், கம்பம் சுற்றுவட்டாரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மேகமலை அருகே உள்ள தூவானம் அணை , அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

சுருளி அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அருவிப் பகுதியில் கற்கள் விழும் அபாயம் இருப்பதாலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க மே 9 ஆம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதையும் படிங்க : ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.. புதுச்சேரியில் ஆய்வு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்!

தொடர்ந்து சுருளி அருவிப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை சார்பாக 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது . இன்று (12/05/2023) சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து பொதுமக்கள் சுருளி அருவிப் பகுதியில் குளிப்பதற்கு வனத்துறையினர் மீண்டும் அனுமதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  “மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுருளிஅருவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது . பொது மக்களின் பாதுகாப்பு கருதி சுருளி அருவி பகுதியில் நீர்வரத்து குறையும் வரை சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நீர்வரத்து சீரான நிலையில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது“ என்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni