ஹோம் /தேனி /

சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க அனுமதி.. மக்கள் கூட்டம் கூடியது.! 

சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க அனுமதி.. மக்கள் கூட்டம் கூடியது.! 

சுருளி அருவி

சுருளி அருவி

Theni Suruli Falls | சுருளி, சின்ன சுருளி அருவிகளில் வெள்ளம் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதி அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க 55 நாட்களுக்கு பிறகு  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகாளய அமாவையின் போது அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு மூதாதையர்களுக்கு தர்ப்பனங்களையும் நடத்தி விட்டு சென்றனர்.

மேகமலை அடிவாரத்தில் சின்ன சுருளி அருவி:

மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில், ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்ன சுருளி அருவியில் நீர் வரத்து அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும், இதன் தொடர்ச்சியாக கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை குறைந்து நீர் வரத்து சீரானதால் அருவிகளில் குளிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுருளி, சின்ன சுருளி அருவிகளில் வெள்ளம் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதி அளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கவேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து 53 நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிக்க நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாலை முதல் அங்கு வந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த வழிபட்டு சென்றனர். இதனால் கம்பம் சுருளி அருவி பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது.

Published by:Arun
First published:

Tags: Local News, Theni