கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நினைக்கும், மக்கள் தங்கள் கிராமம் வழியாக செல்லும் முல்லை பெரியாற்றில் தினமும் குதித்து, குளித்து சூட்டைத் தனித்துக்கொள்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி நகரின் வழியாக செல்கிறது முல்லை பெரியாறு. இந்த ஆற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, தினமும் குளியல் போடுகின்றனர். புகழ்பெற்ற வீரபாண்டி திருவிழா நிறைவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டுள்ள கோடை விடுமுறையில் நேரத்தைப் போக்க வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் போதுமான அளவு நீர் வரத்து உள்ளதால் சிறுவர்கள் பெண்கள் என குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் போதுமான நீர்வரத்து உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தளம் போல உள்ளது. குடும்பத்துடன் குளிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. தற்போது நீர்வரத்து குறைவாக உள்ளதால் குடும்பத்துடன் குளிக்க முடிகிறது. நேரத்தை செலவழித்து ஆனந்த குளியல் போடுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.