ஹோம் /தேனி /

கம்பம் : கார்த்திகை திருநாளில் உடலில் அகல் விளக்குகள் ஏற்றி யோகசனம் செய்த மாணவர்கள்

கம்பம் : கார்த்திகை திருநாளில் உடலில் அகல் விளக்குகள் ஏற்றி யோகசனம் செய்த மாணவர்கள்

X
உடலில்

உடலில் அகல் விளக்குகள் ஏற்றி யோகசனம் செய்த மாணவர்கள்

Theni District News : தேனியில் யோகாசன நிலையில் உடலில் கார்த்திகை தீபத்தை மாணவர்கள் ஏற்றினார்கள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி கார்த்திகை திருநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் உடலில் கார்த்திகை தீபம் ஏந்தியவாறு யோகாசனம் செய்து கார்த்திகை வழிபாடு செய்தனர்.

கார்த்திகை பண்டிகை : 

திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, நாட்டில் மக்களிடத்திலே சமத்துவம் நிலைத்திடவும், பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருளுக்கு அடிமையாகும் நிலை மாறி முழுமையாக யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ரிஷி யோகா அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகள் யோகா நிலையில் உடலில் தீபமேற்றி கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு நடத்தினர்.

கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாளைவிடவும் சிறப்பாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை வழிபடும் கார்த்திகை தீபத் திருநாளில் பொதுமக்கள் வேண்டுவது நிறைவேறும் என்ற ஐதீகம் இருப்பதால் திருக்கார்த்திகை நாளில் பொதுமக்கள் சிவபெருமானை வழிபட்டு காலை மற்றும் மாலை வேலைகளில் வீடுகளில் விளக்கேற்றி கடவுளை வழிபடுவர்.

இதையும் படிங்க : தேனி பரமேஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் நெகிழ்ச்சி!

மாலை வேளைகளில் வீடுகளிலும், வீட்டு முற்றங்களிலும் விளக்கேற்றி கொண்டாடும் திருக்கார்த்திகை நாளன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும்.

இந்த திருக்கார்த்திகை நாளை முன்னிட்டு, விவசாயம் செழித்து, நாடு வளம்பெற வேண்டியும், நாட்டில் மக்களிடத்திலே சமத்துவம் நிலைத்திடவும் வேண்டியும், பள்ளி மாணவ மாணவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டியும் கம்பம் ரிஷியோகா அறக்கட்டளை நிறுவனர் யோகா ராஜேந்திரன், பயிற்சியாளர்கள் ரவிராம் தலைமையில் மாணவ. மாணவிகள் விஜய் ஆதித்யா, விஸ்வா, ரமணன், கலாநிதி, சர்வேஸ், ஆதர்ஸ், ஜெய சந்தோஷ் இன்று மாலை உத்தித பத்மாசனம், நட்சத்திர ஆசனம், மச்சாசனம், ஒட்டகாசனம், குக் குடாசனம், சிரசாசனம், ஏக பாத ஆசனம், பத்மசிரசாசனம், காகாசனம், ஓம் கார ஆசனம், ஏக பாதசிக்கந்தாசனம் நிலையில் உடலில் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Karthigai Deepam, Local News, Theni