ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் முதல்முறையாக மாநில அளவிலான சைக்கிள் பந்தயம்..

தேனி மாவட்டத்தில் முதல்முறையாக மாநில அளவிலான சைக்கிள் பந்தயம்..

X
தேனி

தேனி

Theni Cycling Competition 2022 : தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் ஒட்டுமொத்த பரிசையும் தென்காசி விருதுநகர் மாவட்ட போட்டியாளர்கள் அள்ளிச் சென்றனர் .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழ்நாடு மாநில சைக்கிளிங் சங்கம் மற்றும் தேனி மாவட்ட சைக்கிளிங் சங்கம் இணைந்து மாநில அளவிலான 66 ஆவது ரோடு ரேஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்றது.

தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டி தேனி மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெற்றது . இந்த போட்டியானது 12 வயதுக்குட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள், 23 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 23 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என 7 பிரிவுகளாக கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் துவங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது

இந்த போட்டியில் விருதுநகர், நீலகிரி, நெல்லை, சென்னை, சிவகங்கை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

தேனியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம்

மேலும் படிக்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்..தேனி

வயது வாரியாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் அதிகபட்சம் வெற்றியை பதிவு செய்த மாவட்டமாக ஆண்கள் பிரிவில் தென்காசி மாவட்டமும், பெண்கள் பிரிவில் விருதுநகர் மாவட்டமும் சிறப்பு பரிசை வென்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தேனி மாவட்ட சைக்கிளிங் சங்க சேர்மன் அன்பழகன், கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் , தேனி மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவர் காந்தசொரூபன் , சங்கச் செயலாளர் பெரிய தம்பி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

First published:

Tags: Cumbum, Local News, Theni