Union
Budget 2023

Highlights

ஹோம் /தேனி /

மாற்றுத் திறனாளிகளுக்கு புத்துணர்வு.. கம்பம் நகரில் களைகட்டிய விளையாட்டு போட்டிகள்..

மாற்றுத் திறனாளிகளுக்கு புத்துணர்வு.. கம்பம் நகரில் களைகட்டிய விளையாட்டு போட்டிகள்..

X
தேனியில்

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

Theni District News | தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் , சமூகத்தின் அனைத்து துறை மேம்பாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள பங்கு , அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை , மாற்றுத்திறனாளிகளின் நலன் , அரசியல் கலாச்சாரம் வாழ்வியல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகள் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு , அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் மாற்றுத்திறனாளிகள் நலன் அறக்கட்டளையாக தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் தேனீக்கள் அறக்கட்டளை மற்றும் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்..

தேனீக்கள் அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தனியார் அமைப்புகளான வின்னர் ஸ்போர்ட்ஸ், ரீச் டெலிவரி மையம் ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், சதுரங்கம், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

இந்த போட்டிகளில் 100 க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் அளிக்கும் விதமாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி தோல்வி என எதுவும் கிடையாது எனவும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் தங்களுடைய பங்கை அளிக்கும் விதமாகவும், சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் மாற்றுத் திறனாளிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த போட்டி என்பதால், இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

First published:

Tags: Cumbum, Local News, Theni