ஹோம் /தேனி /

Theni | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேனி காந்தி ஆலயத்தில் தீபாராதனை காட்டி வழிபாடு - பொதுமக்கள் பங்கேற்பு

Theni | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேனி காந்தி ஆலயத்தில் தீபாராதனை காட்டி வழிபாடு - பொதுமக்கள் பங்கேற்பு

தேனி

தேனி காந்தி ஆலயம்

Theni | தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன் பட்டியில் உள்ள மகாத்மா காந்தி ஆலயத்தில் 153-வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni | Cumbum

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன் பட்டியில் உள்ள மகாத்மா காந்தி ஆலயத்தில் 153-வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

காந்தி ஜெயந்தி

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக கடைபிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட அகிம்சைப் போராட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் சுதந்திரத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவந்தார்.

காந்திக்கு வழிபாடு

அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த காந்தியடிகள் தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் தனது சுதந்திர போராட்ட பிரச்சாரத்தை நடத்தினார். பின்னர் காந்தியடிகளின் மறைவுக்குப் பின் அவரது அஸ்தியை இங்கு உள்ள தியாகிகள் கொண்டுவந்து, காந்தி ஆலயம் இருக்கும் இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு அருகில் உள்ள புனித தலமான சுருளி அருவியில் காந்தியின் அஸ்தியை கரைத்தனர்.

தேனி காந்தி ஆலயம்

இதன் நினைவாக அவர் பிரச்சாரம் செய்த இடத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆலயம் எழுப்ப முடிவு செய்து இங்கு சிறிய அளவில் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த மகாத்மா காந்தி ஆலயத்தில் ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய நாட்களில் காந்திக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

தேனி காந்தி ஆலயம்

இதன் தொடர்ச்சியாக நேற்று மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள், தியாகிகளின் வாரிசுகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு மகாத்மா காந்தி ஆலயத்தில் அவரை வணங்கி குத்துவிளக்கு ஏற்றி, தீபாராதனை காண்பித்து ஒரு கடவுளுக்கு செய்யும் அனைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகளை செய்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni