ஹோம் /தேனி /

போடி விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..

போடி விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..

X
போடி

போடி விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில்

Theni New Year Special Poojai | தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ஸ்ரீவிருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி ஊராட்சிக்குட்பட்ட தீர்த்ததொட்டி என்ற இடத்தில் ஸ்ரீவிருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு , புத்தாண்டு தின சிறப்பு பூஜை நடைபெற்றது.

2023ம் ஆண்டு தொடக்கத்தை மகிழ்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்வரும் காலங்களில் வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் அருகாமையில் உள்ள கோயிலுக்கு சென்று புத்தாண்டு தினத்தில் வழிபடுவர்.

இதையும் படிங்க : நாமக்கல்லில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ஸ்ரீவிருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருப்பாச்சி ஆறுமுக நாயனார் சந்தன காப்பில் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni