ஹோம் /தேனி /

8 ஒன்றியங்களில் கடன் வழங்க சிறப்பு முகாம் - தேனி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

8 ஒன்றியங்களில் கடன் வழங்க சிறப்பு முகாம் - தேனி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடன் வழங்க சிறப்பு முகாம்

கடன் வழங்க சிறப்பு முகாம்

Theni District | பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், கடன் வழங்க சிறப்பு முகாம்கள் தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் நடைபெற இருப்பதாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

கடன் வழங்க சிறப்பு முகாம் தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கடனுதவி வழங்கும் திட்டத்துகான சிறப்பு முகாம்கள் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, சின்னமனூர், போடி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாம்களில் சாதிச்சான்றிதழ், வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், முன்னணியில் உள்ள நிறுவனத்தின் விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கிகோரும் அடமானத்துக்குரிய ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.

Must Read : அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் டூரிசம்.. குண்டாறு அணையில் கேம்ப் ஸ்டே.. மெருகேறப்போகும் குற்றாலம்..

முகாம்களில் பங்கேற்க முடியாதவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என்று, தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Loan, Local News, Theni