ஹோம் /தேனி /

தேனியில் தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி.. விதவிதமான ஆசனங்கள் செய்து அசத்திய மாணவர்கள்!

தேனியில் தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி.. விதவிதமான ஆசனங்கள் செய்து அசத்திய மாணவர்கள்!

X
யோகா

யோகா போட்டி 

Cumbum Yoga Competition | தேனி மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் ரிஷி யோகா அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் தென் மாவட்ட அளவிலான மாபெரும் யோகாசன போட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் ரிஷி யோகா அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் தென் மாவட்ட அளவிலான மாபெரும் யோகாசன போட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்றது.

யோகாசன போட்டி

ஒவ்வொரு ஆண்டும் தென் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் தேனி மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் ரிஷி யோகா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் யோகாசன போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில் , இந்தாண்டு தென் மாவட்ட அளவிலான மாபெரும் யோகாசன போட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்றது.

கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி குழந்தைகளுக்கு இடையான யோகாசன போட்டி நடத்தப்பட்டது . இந்த போட்டியில் தென் மாவட்டங்களான விருதுநகர் தேனி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசன போட்டிகளில் பங்கேற்றனர்.

யோகாசன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசும் , ஒட்டுமொத்தம் சேம்பியன்ஷிப் பெற்ற பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது .

ALSO READ | தேனி அன்னஞ்சி அரசுப் பள்ளியில் ‘வானவில் மன்றம்’ துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

இந்த நிகழ்ச்சியானது தேனி மாவட்ட யோகசன சங்கத் தலைவர் காந்தவாசன் தலைமையிலும் , தேனி மாவட்ட யோகாசன சங்க துணைத் தலைவர் ஹைதர் அலி முன்னிலையிலும் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் ரவி, ரிஷி யோகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜேந்திரன், பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் ஏராளமான மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்

First published:

Tags: Local News, Theni, Yoga