முகப்பு /செய்தி /தேனி / இந்தா ஓடிட்டேன்ல... பச்சை பாம்பின் பிடியிலிருந்து தப்பி ஓடிய எலி! - வைரல் வீடியோ

இந்தா ஓடிட்டேன்ல... பச்சை பாம்பின் பிடியிலிருந்து தப்பி ஓடிய எலி! - வைரல் வீடியோ

வைரலாகும் பச்சை பாம்பு வீடியோ..!

வைரலாகும் பச்சை பாம்பு வீடியோ..!

எலியை விழுங்க முயற்சித்த பச்சை பாம்பு ஒன்று கடும் போராட்டத்திற்கு பின் எலியை விட்டு விட்டு மரத்தில் ஏறி செல்கிறது. அதன்பின் எலி தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Theni, India

பொதுவாக பாம்பு எலியை வேட்டையாடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கண் இமைக்கும் நேரத்தில் பாம்புகள் பதுங்கி இருந்து வேட்டையாடும் திறன் கொண்டவை. ஆனால் அந்த பாம்பின் பிடியிலிருந்து தப்பியோடும் உயிரினங்களின் கதையும் இருக்கத்தான் செய்கிறது. அப்படியொரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட, கடமலைக்குண்டு கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள ஒரு புங்கன் மரத்தில் இருந்து பச்சைப்பாம்பு ஒன்று, வேலியில் அமர்ந்திருந்த எலியை தீடிரென பிடித்தது. சிறிய அளவிலான அந்த பச்சைப்பாம்பு, தன்னைவிட பெரிதாக இருந்த எலியின் வாயை கவ்வியபடி, அதை முழுங்க முயற்சித்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

சுமார் அரைமணிநேரம் எலியை வாயில் கவ்வியபடி பாம்பு அப்படியே இருந்தது. எலியும் துடித்தபடி பாம்பிடம் இருந்து விடுபட முயற்சி செய்தது. நீண்ட நேரமாக எலியை விழுங்க முயற்சித்த பச்சை பாம்பு கடைசியில் விழுங்க முடியாமல் எலியை விடுவித்து மரத்தில் ஏறி சென்றது.

Read More : இயற்கையின் மீது தீராத காதல்.. மரங்களில் வண்ணம்தீட்டி மனங்களை வென்ற ஓவியர்..!

காயமடைந்த எலி சில நிமிடங்கள் அங்கேயே நின்றுவிட்டு தாவிச் சென்று மறைந்தது. பச்சை பாம்பு எலியை முழுங்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Snake, Theni, Trending Video, Viral Video