ஹோம் /தேனி /

புகையில்லா போகி பண்டிகை.... பழைய பொருட்களை சேகரிக்க தேனியில் சிறப்பு மையங்கள்

புகையில்லா போகி பண்டிகை.... பழைய பொருட்களை சேகரிக்க தேனியில் சிறப்பு மையங்கள்

போகி பண்டிகை 

போகி பண்டிகை 

Theni District | புகையில்லா போகி பண்டிகையை வலியுறுத்தி தேனி மாவட்ட மக்களிடம் இருந்து பழைய பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் புகையில்லா போகிப் பண்டிகையை வலியுறுத்தி, மக்களிடம் இருந்து பழைய பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுமார் 30டன் கழிவுகள் சேகரமாகின்றன. இந்நிலையில், வரும் 14சூம் தேதி (சனிக் கிழமை) போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

மார்கழி மாதத்தின் கடைசிநாளில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முன்னோர் வாக்குப்படி கொண்டாடப்படும் இந்நாளில் பழைய , பயனற்ற பொருட்களையும் கழிப்பது வழக்கம். அடுத்தநாளான தை முதல் நாளில் இருந்து புதுமைகள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி போகியன்று, வீடுகளில் உள்ள பழைய துணிகள், பழைய பாய்கள், பயன்படுத்திய பிற பழைய பொருட்களை எரிக்கின்றனர். அந்த வகையில் சிலர் டயர், பிளாஸ்டிக் பொருள் உள்ளிட்டவைற்றையும் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. எனவே, சுற்று சூழலை காக்கும் நோக்கில்,போகி பண்டிகைக்காக நகராட்சி சார்பில் தேனியில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனப்டி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கழிக்க விரும்பும் பழைய பொருட்களை இங்கே ஒப்படைக்கலாம். இதற்காக பொம்மையகவுண்டன்பட்டி, பழைய கம்போஸ்ட் ஓடை தெரு, சமதர்மபுரம், மேற்குசந்தை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையங்கள், 14ஆம் தேதி வரைசெயல்படும்.  நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்களில் பழைய பொருட்களை கொடுக்கலாம்.

Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

மேலும், தெருக்களில் அன்றாடம் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடமும் பழைய குப்பை பொருட்களை கொடுக்கலாம். அவர்கள் சேகரிப்பு மையங்களில் அதனை வழங்குவர். பொதுமக்கள் இந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Bhogi, Local News, Pongal 2023, Theni